மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1004 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1004 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1004 days ago
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கான தேர்வும் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 9 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 17 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் சினேகா, ப்ரியா என்ற இரட்டை சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வானது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினேகா, ப்ரியாவை விட திறமையான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதாகவும் ஆனால், டிஆர்பிக்காக விஜய் டிவி இரட்டையர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரவலாக சோஷியல் மீடியாவி பேசப்பட்டு வருகிறது. எனினும், சிலருக்கு இரட்டையர்களின் என்ட்ரி ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் ஏற்கனவே பின்னணி பாடகர்களாவும் இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
1004 days ago
1004 days ago
1004 days ago