உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எந்த கொம்பனா வேணா இரு' - எச்சரித்த ரேகா நாயர்

'எந்த கொம்பனா வேணா இரு' - எச்சரித்த ரேகா நாயர்

சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தன் மனதில் பட்ட கருத்தினை மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர். குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை குறித்தும் பலமுறை கருத்துகள் கூறியுள்ளார். சினிமா நடிகைகள் குறித்து அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரையும் விளாசி வருகிறார். ரேகாவின் கருத்துகளை சிலர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை கூட தவறான முறையில் மார்பிங் செய்து அவரை கொச்சையாக சித்தரித்து வருகின்றனர். மேலும் அவரது பெயரில் போலியான சமூகவலைதள கணக்குகளை தொடங்கி தவறான வழியிலும் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரேகா.

அதில் அவர் 'தினந்தோறும் நான் செய்கிற செயல்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிடுவது யாருக்கேனும் அது பயன்படும் என்கிற நல்ல நோக்கத்தில் மட்டும் தான். அதை நீங்கள் எப்படி வேண்டுமானால் நினைத்துக் கொள்ளுங்கள் கமெண்ட் அடித்து கொள்ளுங்கள். அதற்காக நான் தூக்குப்போட்டு சாகப்போவது கிடையாது. ஆனால் அதை பயன்படுத்தி பேக் ஐடிக்களை உருவாக்கி தவறான முறையில் சிலர் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என் கைகளில் கிடைத்தால் வேறுமாதிரி ஆகிவிடும். நான் மிரட்டவில்லை. அது எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி' என்று எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !