தமிழில் அறிமுகமாகும் ஊ அண்டவா... பாடகி
ADDED : 1033 days ago
இந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவை கலங்கடித்த படம் புஷ்பா. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இந்த படத்தில் சமந்தா ஆடிய ஊ ஆண்டவா... தெலுங்கு பாடலை பாடியவர் இந்திரவதி சவுகார். தமிழில் ஆண்ட்ரியா பாடி இருந்தார். தற்போது இந்திரவதி சவுகான் தமிழில் அறிமுகமாகிறார்.
பெருமாள் காசி இயக்கத்தில் உருவாகும் என்ஜாய் என்ற படத்தில் “சங்கு சக்கர கண்ணு…” என்ற பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை விவேகா எழுதி உள்ளார். கே.எம்.ரியான் இசை அமைத்துள்ளார். எல்.என்.எச் கிரியேஷன் சார்பில் க.லட்சுமி நாராயணன் தயாரிக்கிறார். மதன், விக்கேனஷ், ஹரிஷ்குமார், நிரஞ்சனா, அபர்ணா, சாய்தன்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இது ஒரு அடல்ட் கண்டன்ட் படமாகும்.