ஜெயிலரில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி
ADDED : 1079 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛ஜெயிலர்'. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இன்று(டிச., 12) ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் வீடியோவை வெளியிட்டனர்.
அதில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவில் வயதான தோற்றத்தில் காணப்படும் ரஜினி டிப் டாப் உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு, உடலில் நறுமணம் வீசும் திரவியத்தை அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் அவர் கையில் பட்டாக் கத்தியை எடுப்பது போன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது.