'அப்பா' ஆகப் போகும் ராம் சரண் - சிரஞ்சீவி அறிவிப்பு
ADDED : 1029 days ago
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம் சரணும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ராம் சரண் பத்து வருடங்களுக்கு முன்பாக 2012ம் ஆண்டில் உபாசானாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீ அனுமன்ஜியின் ஆசீர்வாதங்களுடன், உபாசானா, ராம் சரண் இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவி ரசிகர்களும், ராம் சரண் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.