மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1022 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1022 days ago
விஷால், சுனைனா நடித்துள்ள லத்தி படம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. இதனை விஷாலின் நண்பர்கள் ரமணா, நந்தா தயாரித்திருக்கிறார்கள், யுவன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முன்னாள் போலீஸ் டிஜிபி ஜாங்கிட் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது: பொதுவாக சினிமாவில் கதாநாயகர்கள் டிஜிபி, எஸ்பி, ஏஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பெரிய பதவியில் இருக்கும் கதாபாத்திரத்தைத் தான் விரும்புவார்கள். அதில்தான் நடித்தும் வருகிறார்கள். உயர்போலீஸ் அதிகாரிகளுக்கு நல்ல வசதி இருக்கிறது, நவீன ஆயுதங்கள் இருக்கிறது. பாதுகாப்பு இருக்கிறது.
ஆனால், காவல்துறைக்கு நல்ல பெயரோ கெட்ட பெயரோ ஒரு கான்ஸ்டபிள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் கிடைக்கும். நிஜத்தில் ஒரு கான்ஸ்டபிளாக இருப்பது எளிதல்ல, அவருக்கு பல சவால்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை முதன்முறையாக ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடித்த விஷாலுக்கு நன்றி.
8 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் எனக்கு போன் செய்து நான் ஒரு படம் இயக்குகிறேன். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார். அப்போது அவருக்கு நான் சொன்ன கதை தான் தீரன் அதிகாரம் ஒன்று என்று படமானது. இதுபோன்ற நிறைய கதைகள் என்னிடம் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
1022 days ago
1022 days ago