உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொது இடங்களில் ஆபாச உடையில் பவனி: டிவி நடிகை மீது போலீசில் புகார்

பொது இடங்களில் ஆபாச உடையில் பவனி: டிவி நடிகை மீது போலீசில் புகார்

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் உர்பி ஜாவத். சந்திர நந்தினி, மெரி துர்கா, ஜில் மா, தாயன், ஹே மேரா ஹம்ஸ்டார் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். புட்ச் பீட் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

உர்பி ஜாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். படு கவர்ச்சியான படங்களை வெளியிடுவதால் லட்சக்கணக்கானவர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள். அதோடு சமீபகாலமாக பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் படு ஆபாசமாக ஆடை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது மும்பை அந்தேரியை சேர்ந்த வழக்கறிஞர் அலி காஷிப்கான் தேஷ்முக் என்பவர் அந்தேரி காவல் நிலையத்தில் உர்பி ஜாவத் மீது புகார் கொடுத்துள்ளார். “பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் ஆபாசத்தை பரப்பி வருகிறார். இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார். எனவே அவர் மீது சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார். மனு மீது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !