ஜீவா ஜோடியான தான்யா ரவிச்சந்திரன்
ADDED : 1036 days ago
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் அடுத்த படத்தை அறிவித்துள்ளது. இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை டைரக்டர் செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார். நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தமாகி உள்ளனர்.
இது குறித்து பொட்டேன்ஷியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.