தொலைக்காட்சியில் 'சர்க்கார் வித் ஜீவா'
ADDED : 1056 days ago
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கதாநாயகனான ஜீவா சில மாதங்களுக்கு முன் ஓடிடிக்காக புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தார். ஆஹா என்கிற ஓடிடி தளத்தில் 'சர்க்கார் வித் ஜீவா' என்ற தலைப்பில் அந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப உள்ளது. இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கார் வித் ஜீவாவின் முதல்வார எபிசோடில் காமெடி நடிகர்களான ரோபா சங்கர், ஜெகன், பால சரவணன் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்கார் வித் ஜீவா நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும். அதன்பிறகு, கலர்ஸ் தமிழின் ஓடிடி தளமான வூட் ஆப்பிலும் நேயர்கள் அதை கண்டுகளிக்கலாம்.