மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
993 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
993 days ago
நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் நுழைந்து நடித்துள்ள வாரிசு தெலுங்கு படம் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மையப்படுத்தியே இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் தோழா என்கிற படத்தை கொடுத்த இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கான தியேட்டர் ஒதுக்கீடு குறித்து சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து புரமோசன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி கொடுத்து வரும் தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தில் விஜய்யை நடிக்க வைத்தது குறித்து ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
அதாவது இந்த படத்தின் கதை முதலில் எழுதப்பட்டதே நடிகர் மகேஷ்பாபுவை மனதில் வைத்துதான்.. ஆனால் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அதன் பிறகு ராம்சரண், அவரை தொடர்ந்து பிரபாஸ், அல்லு அர்ஜுன் என இந்த கதை நான்கு ஹீரோக்களை முதலில் சுற்றி வந்துள்ளது. ஆனால் நான்கு பேருமே பிசியாக இருந்ததால் அதன்பிறகு தான் இந்த படத்திற்கு விஜய் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார் தில் ராஜு.
எது எப்படியோ வழக்கமாக மகேஷ்பாபு நடித்த ஹிட் படங்களை ரீமேக் செய்து இங்கே வெற்றி பெற்று வந்த விஜய், இப்போது அவருக்காகவே எழுதப்பட்ட நேரடி கதையிலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில் நேரடியாகவே இந்த வாரிசு மூலம் வெற்றியை குவிப்பாரா விஜய் ? பார்க்கலாம்.
993 days ago
993 days ago