புதிதாக கார் வாங்கிய இயக்குனர் சுதா - நண்பர்களுடன் ஜாலி டிரிப்
ADDED : 1083 days ago
துரோகி படத்தில் இயக்குனரானவர் சுதா கெங்கரா. அதன்பிறகு இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கியவர் தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கெங்கரா ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை 1.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த காரில் தனது குருநாதரான இயக்குனர் மணிரத்னமை சந்தித்த சுதா தொடர்ந்து நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் காரில் ஜாலி ரைடு சென்றதாக கூறி அந்த புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார் சுதா.