உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் 3 நாளில் 160 கோடி வசூலித்த அவதார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் 3 நாளில் 160 கோடி வசூலித்த அவதார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் ‛அவதார் தி வே ஆஃப் வாட்டர்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் பாகம் போன்று இல்லை என்பது மாதிரியான கலவையான விமர்சனம் இருந்தாலும், படத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் உள்ளதால் வசூலில் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க வசூலை குவித்து வருகிறது. இந்தியாவில் படம் வெளியான 3 நாட்களில் 160 கோடி வசூலித்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இந்திய விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அவதார் வெளியீட்டுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் தீபாவளி கொண்டாட்டம் போல் உள்ளது. அவதாரின் 2ம் பாகம் உலகளாவிய மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸை புயல் போன்று கைப்பற்றியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி பாக்ஸ் ஆபிஸில் 'அனைத்து படங்களின் ராஜா'வாக அவதார் மாறி உள்ளது. கிறிஸ்துமஸ் வார முன்பதிவு முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட 3 நாட்களில் உலகம் முழுக்க 3500 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 160 கோடி வசூலித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !