பெதுருலங்கா படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1021 days ago
கார்த்திகேயா, நேகா ஷெட்டி நடிக்கும் ''பெதுருலங்கா 2012' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அறிமுக இயக்குனர் க்ளாக்ஸ் இயக்கும் இப்படத்தை ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரிக்கிறார். அஜய் கோஷ், ராஜ் குமார் பாசிரெட்டி, கோபராஜு ரமணா, 'ஆட்டோ' ராம் பிரசாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய் பிரகாஷ் உம்மடிசிங்கு, சன்னி குரபதி ஒளிப்பதிவு செய்கிறார்கள், மணிசர்மா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் க்ளாக்ஸ் கூறியதாவது: இது கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம். கார்த்திகேயா & நேஹா ஷெட்டியின் கெமிஸ்ட்ரி கச்சிதமாக இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்தி வருகிறோம். ஜனவரியில் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.