நயன்தாராவுக்கு பதில் ஆண்ட்ரியா
ADDED : 1027 days ago
நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கோபி நயினார் நயன்தாராவுக்கென்று மனுஷி என்ற கதையை எழுதினார். ஆனால் நயன்தாரா வேறு பல படங்களில் பிசியாகி விட்டதால் அவருக்காக காத்திருந்த கோபி நயினார். இப்போது நயன்தாராவுக்கு பதில ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்து படத்தை தொடங்கி விட்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சத்தமின்றி நடந்து வருகிறது. படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கிறது. ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். போஸ்ட்டரை சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.