மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
986 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
986 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர் ஒரு காலத்தில் டிஆர்பியில் அசைக்க முடியாமல் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தது. 1000 எபிசோடை தொட்டுவிட்ட 'பாரதி கண்ணம்மா' தொடரை சீக்கிரம் முடிக்க சொல்லி ரசிகர்களே கமெண்ட் அடித்து வருகின்றனர். எனவே, நேயர்களை ஈர்க்கும் வகையில் பிக்பாஸ் பிரபலங்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக அறந்தாங்கி நிஷா, ரேகா ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் தாமரை செல்வியும் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'பாரதி கண்ணம்மா' தொடரில் கண்ணம்மாவின் நண்பனாக நடித்து வந்த ராஜு ஜெயமோகனும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸுக்கு பின் ராஜு எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை என்பதால், பாரதி கண்ணம்மாவில் அவர் நடித்து வந்த வருண் மோகன் கதாபாத்திரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிக்பாஸ் பிரபலங்களின் என்ட்ரி பாரதி கண்ணம்மாவை டிஆர்பியில் தூக்கிவிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
986 days ago
986 days ago