உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்யராஜ் இயக்கிய குழந்தை நட்சத்திரம் இந்த சீரியல் நடிகை தானா?

பாக்யராஜ் இயக்கிய குழந்தை நட்சத்திரம் இந்த சீரியல் நடிகை தானா?

தொலைக்காட்சி பிரபலமான ப்ரியதர்ஷினியை அனைவருக்கும் வீஜே அல்லது நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தெரிந்திருக்கும். ஆனால், இவர் தமிழில் பல ஹிட் படங்களில் குழந்தையாக நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 1984ம் ஆண்டு வெளிவந்த பாக்யராஜின் தாவணிக் கனவுகள் படத்தில் தான் ப்ரியதர்ஷினி முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிறு குழந்தையாக பாக்யாரஜின் கடைசி தங்கையாக ப்ரியதர்ஷினி நடித்திருப்பார். தொடர்ந்து இதய கோவில், உயிரே உனக்காக உள்ளிட்ட சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ப்ரியதர்ஷினி டீனேஜ் வயதில் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர், ஆங்கர் என வலம் வந்து சில சீரியல்களிலும் நடித்தார். திருமணத்துக்கு பின் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் இப்போது தான் 'எதிர்நீச்சல்' தொடரின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், தன்னை சினிமாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாக்யராஜை சமீபத்தில் ஒரு நேர்காணலுக்காக சந்தித்துள்ளார் ப்ரியதர்ஷினி. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், 'சினிமா ஜீனியஸ், எனது அண்ணன், குரு பாக்யராஜ் சார்' என அவரை புகழ்ந்து பதிவிட்டு தாவணிக் கனவுகள் படத்தில் பாக்யராஜுக்கு தங்கையாக நடித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !