மோகன்லால் படத்தில் கமல்ஹாசன்
ADDED : 1051 days ago
2009ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருந்தார். தற்போது கமல் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் நிலையில், மோகன்லால் மலையாளத்தில் லியோ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தில் கமல்ஹாசனை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், மோகன்லாலும் இணைவது உறுதி ஆகிவிடும்.