தென்காசியில் பைக் ரைடு செய்தாரா அஜித்?
ADDED : 1015 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், அடுத்தபடியாக விக்னேஷ்சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். அதையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு பிரேக் கொடுத்து விட்டு உலகம் முழுக்க பைக் ரைடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் பைக் ரைடு சென்று விட்ட அஜித், தற்போது தமிழகத்தின் சில தென் மாவட்டங்களில் பைக் ரைடு செய்து வருகிறார். தற்போது அவர் தென்காசியில் பைக் ரைடு செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்கிறார்கள்.