ஏழை பெண்ணுக்கு ஆட்டோ பரிசளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1113 days ago
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் இன்று வெளியாகி உள்ளது. இதில் அவர் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக தனியார் சேனல் ஒன்றில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி பெண் டிரைவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார். கலந்து கொண்டவர்களில் ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு சார்பில் ஐஸ்வர்யா பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் படத்தில் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுனராக பணியாற்றிய போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.