ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் காயத்ரிக்கு விருது
ADDED : 1051 days ago
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்படவிழா நடந்து வருகிறது. இந்த விழாவின் போட்டி பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து கார்கி, மாமனிதன், விசித்திரன், இரவின் நிழல் படங்கள் திரையிடப்பட்டது. இதில் மாமனிதன் படத்தில் நடித்த காயத்திரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மாமனிதன் படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். விஜய்சேதுபதி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கணவன் கைவிட்டுவிட்டு சென்ற நிலையிலும் தனது இரு குழந்தைகளை வளர்க்கும் தாயாக காயத்ரி நடித்திருந்தார். யுவன்சங்கர் ராஜா தயாரித்திருந்ததோடு, இளையராஜாவுடன் இணைந்து இசையும் அமைத்து இருந்தார்.