ஹெத்தையம்மன் திருவிழா : பாரம்பரிய உடையில் வழிபட்ட சாய்பல்லவி
ADDED : 1031 days ago
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சாய்பல்லவி. அடிப்படையில் நடன கலைஞரான இவர் மருத்துவம் படித்தவர். பிரேமம் படத்தில் அறிமுகமான சாய்பல்லவி. கடைசியாக கார்கி படத்தில் நடித்திருந்தார். படுகர் இன மக்களின் குல தெய்வம் ஹெத்தையம்மன். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் கோயில் கோத்தகிரியின் பேரகணியில் உள்ளது. இங்கு நடந்த திருவிழாவில் நடிகை சாய்பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய வெண்ணிற உடையும், அவர்களின் ஆபரணங்களை அணிந்தும் கலந்து கொண்டார். இந்த வழிபாட்டுக்கு 15 நாட்கள் கடுமையான விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருந்து இந்த வழிபாட்டில் அவர் கலந்து கொண்டார். அவரை அடையாளம் கண்டவர்கள் அவருடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்கள்.