திரில்லாக சொல்ல வரும் இன்னும் ஒரு காதல் பயணம்
ADDED : 1061 days ago
மதுரை மணிக்குறவர் படத்தை தயாரித்த காளையப்பன் தயாரித்து நடிக்கும் படம் இன்னும் ஒரு காதல் பயணம். இதில் நாயகனாக நவீன், நாயகியாக மலையாள நடிகை மெரின் பிலிப் நடிக்கின்றனர். பாடலீஸ்வரன், சார்லி, ஜி.பி.முத்து, ஜார்ஜ், சுவாமிநாதன், கும்கி அஸ்வின், மதன்பாப், ஜெய் ஆனந்த், கீர்த்தனா, தீபா, மகேந்திரன், காதல் அருண், தியா, மூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், வாரன் சார்லி இசை அமைக்கிறார்.
ஆர்.டி.குஷால் குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: காதலனும், காதலியும் தங்கள் காதலை கொண்டாட கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைதான் படம். தொடைக்கானலில் காதலர்களுக்கு வரும் ஆபத்துகளை வரிசைபடுத்தி திரில்லாகவும், திகிலாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் படம். என்கிறார்.