அரவணைப்பில் என் குடும்பம் : விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்
ADDED : 994 days ago
கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் போது தங்களது இரட்டை குழந்தைகளுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அதேபோல் தற்போது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், தன்னுடைய ஒரு கையின் அரவணைப்பில் நயன்தாராவும், இன்னொரு கையில் இரண்டு குழந்தைகளையும் பிடித்திருக்கிறார். அதோடு மகாநதி படத்தில் இடம்பெற்றுள்ள பொங்கலோ பொங்கல் என்ற பாடலையும் அதில் அவர் இணைத்திருக்கிறார். அதேசமயம் வழக்கம் போல் தங்களது குழந்தைகளின் முகத்தை காண்பிக்காமல் எமோஜி வைத்து மறைத்துள்ளார்கள்.