மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
984 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
984 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
984 days ago
ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய். அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பரணி இசை அமைத்துள்ளார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வேலன் கூறியதாவது: சமூக அக்கறையோடு கிராமத்தில் வாழும் நான்கு நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது காதல் மனைவியோடு சென்னை வர நேரிடுகிறது. சென்னையில் வாழ வழி தேடும் அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலைவெறியாட்டத்தை காண நேரிடுகிறது.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல்துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கும்பலை தனி மனிதர்களாக இந்த கிராமத்து இளைஞர்கள் போராடி சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளை தோலுரித்து காட்டியும், சட்டம் தப்பு செய்தவர்களை தண்டித்ததா? இல்லை அப்பாவிகளை குற்றவாளிகளாக்கியதா? என்பதுதான் இப்படத்தின் கதை.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றை சொல்வதில்லை. பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், மெய்ப்பட செய் படத்தில் பாலியல் குற்றங்கள் எதனால் நடக்கிறது? என்பது பற்றி விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது. வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. என்றார்.
984 days ago
984 days ago
984 days ago