உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொம்மை நாயகி யோகி பாபுவுக்கு விருதுகளை பெற்றுத் தருவாளா?

பொம்மை நாயகி யோகி பாபுவுக்கு விருதுகளை பெற்றுத் தருவாளா?

காமெடி நடிகரான யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. மண்டேலா படத்திற்கு பிறகு சீரியசான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஷான் கூறியதாவது: எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி. யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. பிப்ரவரி 3ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த படம் அவருக்கு பல விருதுகளையும் பெற்றுத் தரும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !