புத்தக கண்காட்சியில் மடிப்பிச்சை ஏந்திய பார்த்திபன்
ADDED : 1035 days ago
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த கண்காட்சியில் ஆயிரம் அரங்கில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு அரங்கிலும் சென்று துண்டை நீட்டி மடிப்பிச்சை கேட்டு புத்தகங்களைப் பெற்றார். இதை பார்த்து கண்காட்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பார்த்திபனின் மடிப்பிச்சையில் 1000 புத்தகங்கள் சேர்ந்தன. இந்த புத்தகங்களை கைதிகள் படிக்க வசதியாக தமிழ்நாடு முழுக்க உள்ள சிறைச்சாலைகளுக்கு அனுப்ப இருக்கிறார். பார்த்திபனின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.