சர்வானத்திற்கு நிச்சயதார்த்தம்
ADDED : 1066 days ago
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் காதலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு விரைவில் திருமணம் என சமீபத்தில் தகவல் வந்தது. இந்நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியரான ரக் ஷிதா ரெட்டிக்கும் இவருக்கும் இன்று(ஜன., 26) ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். திருமணம் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்.