'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1026 days ago
தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா தற்போது நடித்து வரும் படம் பெதுருலங்கா 2012. நேஹா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கிளாக்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரித்துள்ளார்.
இந்த படம் 2012ம் ஆண்டு பெருதுலங்கா என்ற கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை காமெடியாக சொல்லும் படம். சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பிப்ரவரி 1ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடக்க இருக்கிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.