தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி
நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.