மகனுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த காஜல்
ADDED : 982 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‛இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த படத்திற்காக குதிரை ஏற்றம், களரி போன்ற பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடிக்கும் காஜல் அகர்வால், இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 108வது படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில், நேற்று தனது மகன் நீல் மற்றும் தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் காஜல். அப்போது அவருக்கு தேவஸ்தானத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவருக்கும் அவரது மகனுக்கும் ஆசி வழங்கியுள்ளனர்.