திரைப்பட இயக்குனர் சண்முகப்ரியன் காலமானார்
ADDED : 1074 days ago
ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்க சாமி, உதவும் கரங்கள் படங்களை இயக்கியவர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர். பிரம்மா, வெற்றி விழா, சின்னத்தம்பி பெரியதம்பி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார்.
71 வயதான சண்முகப்பரியன் திரைப்படத்துறையில் இருந்து விலகி போரூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.