மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா!
ADDED : 977 days ago
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்பட சில படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். அதன் பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சுதா கெங்கராவுக்கு விபத்தினால் கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையில் தான் ஈடுபட்டு இருப்பதாகவும் அது குறித்த ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, ‛சூப்பர் வலி, சூப்பர் எரிச்சல், ஒரு மாதம் படப்பிடிப்பிற்கு பிரேக். இப்படி ஒரு ஓய்வை நான் கேட்கவில்லை' என்றும் பதிவு செய்திருக்கிறார் சுதா கொங்கரா.