3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்
ADDED : 981 days ago
இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருது வென்று அசத்தி உள்ளார்.
உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. 2023ம் ஆண்டுக்கான கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அதில் இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ், 'டிவைன் டைட்ஸ் வித் ராக் - லெஜெண்ட் கோப்லேண்ட்' என்ற ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றார்.
இதற்கு முன் ரிக்கி கேஜ் கடந்த 2015 மற்றும் 2022ல் கிராமி விருது வென்றார். இப்போது மூன்றாவது முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.