தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி
ADDED : 1014 days ago
வளர்ந்து வரும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. ஹேப்பி எண்டிங் படத்தில் அறிமுகமான இவர் லக்ஷயம், மேட்ச் பாக்ஸ், சகலகலாசாலா, கும்பளாங்கி நைட்ஸ், தமாஷா, அப்பன் படங்களில் நடித்தார். தற்போது தமிழ் படத்திற்கு வருகிறார் கிரேஸ்.
‛ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வரும் ராம் அடுத்து ஓடிடி தளத்திற்காக ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியாக கிரேஸ் நடிக்கிறார். இந்த படத்தை ஓடிடி தளத்திற்காக செவன் ஹீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விரைவிலேயே மக்கள் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.