ராஜஸ்தானில் படமான ஜெயிலர் படத்தின் அதிரடி சண்டைக்காட்சி
ADDED : 972 days ago
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள இப்படத்தில் ரஜினியுடன், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். தற்போது சண்டை மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள ஜெயிசல்மார் என்ற பகுதியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி நடிக்கும் ஒரு அதிரடியான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அது குறித்த சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் பல வாகனங்கள் கவிழ்ந்து கிடக்கின்றன . அதனால் அங்கு படமாக்கப்பட்டது சேஸிங் சண்டைக்காட்சியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.