கிரிக்கெட் உலக பிரபலத்துடன் சஸ்டிகா ராஜேந்திரன்
ADDED : 969 days ago
தனியார் மியூசிக் தொலைக்காட்சியில் சுட்டித்தனமாக காமெடி கலந்து ஆங்கரிங் செய்து வந்த சஸ்டிகா ராஜேந்திரனுக்கு குழந்தைகளும், இளைஞர்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இடையில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகையான சஸ்டிகா, சந்தானத்துடன் பாரீஸ் ஜெயராஜ் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் திடீரென ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக களத்தில் குதித்த சஸ்டிகா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 என்கிற டி20 கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அயன் பிஷப் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சஸ்டிகாவின் இந்த அபாரமான வளர்ச்சியை பார்த்து மகிழும் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வளர வாழ்த்தி வருகின்றனர்.