12 வயது அதிகமான காதலியுடன் காதலர் தினம், 'துணிவு' தயாரிப்பாளரின் மகன்
'துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அவருக்கு முதல் மனைவி மோனா ஷோரி கபூர் மூலமாகப் பிறந்த மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட்டில் நடிகராக இருக்கும் 37 வயதான அர்ஜுன் அவரை விட 12 வயது மூத்தவரான நடிகை மலாய்க்கா அரோராவை கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்.
கட்டிப்பிடித்தபட இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'ஹாட்டின்' எமோஜி ஒன்றைப் பகிர்ந்து இன்றைய காதலர் தினத்தை இருவரும் கொண்டாடி வருகிறார்கள். பல பிரபலங்களும் இந்த காதலர்களுக்கு பதிலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டில் இவர்களது காதல் பற்றி சர்ச்சை எழுந்த போதெல்லாம் அதைப் பற்றி கடுமையான விதத்தில் பதிலளித்துள்ளார் அர்ஜுன் கபூர்.
இருவரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவிங் டு கெதர்' ஆக வாழ்ந்து வருகிறார்கள்.