உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்! தம்பியை புகழ்ந்த சிரஞ்சீவி

பவன் கல்யாணுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்! தம்பியை புகழ்ந்த சிரஞ்சீவி

சினிமா நடிகர்களில் எனது தம்பி பவன் கல்யாண் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. இதுகுறித்து ஒரு டாக் ஷோவில் அவர் பேசும்போது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பவன் கல்யாணுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள். இதுபோன்று இந்தியாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் என் தம்பியும் ஒருவர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.

அது மட்டுமின்றி 'பவன் கல்யாண், நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. அவர் ஒரு உண்மையான தலைவர், நேர்மையானவர்' என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !