உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை திரும்பினார் அஜித்: விரைவில் 62வது பட அறிவிப்பு வெளியாகிறது

சென்னை திரும்பினார் அஜித்: விரைவில் 62வது பட அறிவிப்பு வெளியாகிறது

அஜித்தின் 'துணிவு' படம் வெற்றி பெற்றது. அதை கொண்டாட குடும்பத்துடன் ஜார்ஜியா சென்றார் அஜித். அங்கு 10 நாட்களுக்கு மேல் குடும்பத்துடன் பொழுதை கழித்த அவர் நேற்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.

இன்று முதல் அவர் தனது 62வது படத்தின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அஜித்துக்காக விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்திடம் சொல்லி ஓகே வாங்கியிருந்த கதையை அஜித் புறக்கணித்து விட்டார். லைக்கா நிறுவனமும் அதை ஏற்று விக்னேஷ் சிவனை கழற்றி விட்டுவிட்டது. தற்போது மகிழ்திருமேனி கதைக்கு லைக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்து விட்டது.

சென்னை திரும்பியுள்ள அஜித்தை மகிழ்திருமேனி விரைவில் சந்தித்து கதை சொல்ல இருக்கிறார். ஏற்கனவே ஒருவரிக்கதை பிடித்து ஓகே சொல்லி உள்ளார். இருந்தாலும் முழுகதையையும் அவர் கேட்க உள்ளார். ஒருவேளை அஜித்துக்கு பிடித்து விட்டால் படத்தை பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். மகிழ்திருமேனி கதை பிடிக்காவிட்டால் மேலும் தாமதமாகாலம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !