போஸ்டர் கிழிக்கும் கோழைகள்: ஸ்வேதா மேனன் ஆவேசம்
ADDED : 996 days ago
மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தற்போது 'பள்ளிமணி' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். இந்த படத்தின் போஸ்டர் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் பல ஊர்களில் இந்த போ-ஸ்டரில் இடம்பெற்றிருந்த ஸ்வேதா மேனனின் படத்தை மட்டும் யாரோ கிழித்து எறிந்துள்ளனர்.
இந்த படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ஸ்வேதா மேனன் எழுதியிருப்பதாவது: இது விஷமத்தனமான வேலையாக இருக்கிறது. என்றை புறக்கணிக்க பார்க்கிறார்கள். யார் செய்திருந்தாலும் இது கோழைத்தனமான செயல், துணிச்சல் இருந்தால் என் முன்னால் வந்து இதனை செய்யட்டும் அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. அதனால்தான் அவர்களை கோழை என்று சொல்கிறேன். இந்த படம் ஒரு இளம் இயக்குனரின் பல வருட கனவு அதை சிதைக்காதீர்கள். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.