உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கிராமத்து கதையில் ரவீணா ரவி

மீண்டும் கிராமத்து கதையில் ரவீணா ரவி

டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகை ஆனவர் ரவீணா ரவி. அதற்பிறகு காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும் படங்களில் நடித்தார். கடைசியாக லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் சகோதரியாக நடித்திருந்தார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக நடிக்கும் படம் 'வட்டார வழக்கு'.

ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு பிறகு மீண்டும் அவர் நடிக்கும் கிராமத்து படம் இது. இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் கதைநாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் சத்யா, வெங்கடேஷ், விசித்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார். “இந்த படம் 1962, மற்றும் 1985 காலகட்டங்களில் நடக்கும் கதை. சொத்து பிரச்சினை காரணமாக பங்காளிகள் மோதிக் கொள்வதும், பின்பு கூடிக்கொள்வதுதமான கதை. அன்றைய கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் படமாகி வருகிறது” என்கிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமசந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !