இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் 55வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ஆனால், இதுவரையில் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவில்லை.
படத்தைத் தயாரிப்பதாக அறிவித்த பிரபல பைனான்சியரான மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ், அப்படத்தின் தயாரிப்பிலிருந்து விலகியதாக செய்திகள் வந்தன. படத்தின் பட்ஜெட், இதர நடிகர்கள் விவகாரத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால், அந்தக் கதையை விட மனமில்லாத தனுஷ், அதுவரையில் செய்யப்பட்ட செலவுகளைக் கொடுத்து அவரே படத்தின் உரிமையைப் பெற்றதாகத் தகவல் வந்தது. விரைவில் அது குறித்து அறிவிப்பு வரும் என்றார்கள்.
தனுஷின் தயாரிப்பு நிறுவமான உண்டர் பார் பிலிம்ஸ் சற்று முன்பு 'டி 55' என்ற ஒரே ஒரு வார்த்தையுடன் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இன்று மாலை இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தனுஷ் தவிர இப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதுடன் அறிவிப்பு வரலாம்.
தனுஷ் தற்போது 'கர' படத்தில் நடித்து முடித்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.