உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம்

பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் பரவலராக நடித்து வருபவர் ஆஷிகா ரங்கநாத். தமிழில் ‛பட்டத்து யானை, மிஸ் யூ' ஆகிய படங்களில் நடித்தார். இப்போது கார்த்தியின் ‛சர்தார் 2'வில் நடித்துள்ளார். இவர் கூறுகையில், ‛‛என் தாய்மொழி கன்னடம். தெலுங்கு படங்கள் பார்த்து தெலுங்கு கற்றேன். தமிழ் ஓரளவு புரியும், அதை கற்பது சிரமமாக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக் கொள்வேன். பல மொழிகளை கற்பது நடிகை என்பதை தாண்டி ஒரு நபராக எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இது இன்னும் என்னை வலிமையாகவும், அர்ப்பணிப்புடன் செயல்பட வைத்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !