மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
927 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
927 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
927 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வந்தது. இரண்டு மாதங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் இப்படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது 'டைட்டானிக்' படத்தின் வசூலை முறியடித்து அடுத்த சாதனையைப் புரிந்துள்ளது. 'அவதார் 2' படம் தற்போது 2.244 யுஎஸ் பில்லியன் டாலரை வசூலித்து, 'டைட்டானிக்' படத்தின் மொத்த வசூலான 2.242 பில்லியன் யுஎஸ் டாலர்(ரூ.18,530 கோடி) வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 'அவதார் 2' வசூல் 18,546 கோடி.
உலக அளவில் அதிக வசூலைக் குவித்துள்ள படங்களில் 'அவதார்' முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர்(ரூ.23, 968 கோடி) வசூலுடன் முதலிடத்திலும், 'அவஞ்சர்ஸ் என்ட் கேம்' படம் 2.7(ரூ.22,319 கோடி) பில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அவதார் 2, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அவதார் 2 அமெரிக்காவில் மட்டும் 657 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து 9வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு மேலாக 'டைட்டானிக்' 659 மில்லியன் வசூலுடன் 8வது இடத்திலும், 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' 678 மில்லியன் வசூலுடன் 7வது இடத்திலும் உள்ளது.
அமெரிக்கா தவிர்த்து பிற உலக நாடுகளின் வசூலைப் பொறுத்தவரையில் 'அவதார் 2' 1.585 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து 3ம் இடத்தைப் பிடித்துள்ளது. 2009ல் வெளிவந்த 'அவதார்' முதல் பாகம் 2.1 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்திலும், 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' 1.9 பில்லியன் வசூலுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
அவதார் 2 படத்திற்கு வெளிநாட்டு வசூலில் 243 மில்லியன் வசூலை சீனா நாட்டிலிருந்து கிடைத்துள்ளது. பிரான்ஸ் 147 மில்லியன், ஜெர்மனி 138 மில்லியன், வசூலைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் 59 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.
927 days ago
927 days ago
927 days ago