கவனம் ஈர்த்த சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி முதல்பார்வை
ADDED : 1002 days ago
பாலிவுட்டில் தேவதாஸ், மேரி ஹோம், பத்மாவதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வெப்சீரிஸ் ஹீராமண்டி. 1947ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா- பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு நடந்த ஒரு கதையை மையமாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கி இருக்கிறார். சரித்திர கால கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதிராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மி சேகல், சஞ்சிதா ஷேக் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதன் முதல்பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இந்த வெப்சீரிஸ் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.