டீமன்: அபர்ணதியின் புதிய படம்
ADDED : 1009 days ago
'எங்கவீட்டு மாப்பிள்ளை' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஆர்யாவின் மணமகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அவராலேயே நிராகரிக்கப்பட்டு அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர் அபர்ணதி. 'தேன்' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு 'ஜெயில்' படத்தில் நடித்தார். 'உடன்பால்' என்ற வெப் தொடரிலும் நடித்தார்.
தற்போது அபர்ணதி டீமன் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேலு இயக்குகிறார். சச்சின் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரோனி ரபேல் இசை அமைக்கிறார். வசந்தபாலனுடன் இணைந்து விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகிறது.