உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எல்லா இடங்களிலும் உன்னை தேடுகிறேன் : அம்மா ஸ்ரீதேவி பற்றி ஜான்வியின் நினைவுப் பதிவு

எல்லா இடங்களிலும் உன்னை தேடுகிறேன் : அம்மா ஸ்ரீதேவி பற்றி ஜான்வியின் நினைவுப் பதிவு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல ஆண்டுகள் தனக்கென தனி இடத்தைப் பிடித்து திரையுலகத்தில் மகாராணியாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஹோட்டல் அறையில் இருந்த பாத்ரூமில் இறந்து கிடந்தார். 54 வயதில் அவரது அகால மரணம் இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். இன்னும் அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அவரது அம்மாவின் நினைவு தினம் வருகிறது. ஆனால், இன்றே அவரது அம்மா பற்றிய நினைவுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“எல்லா இடங்களிலும் உன்னை நான் இன்னும் தேடுகிறேன் அம்மா. உன்னைப் பெருமைப்படுத்தும் விதமாக எல்லாவற்றையும் நான் இன்னும் செய்கிறேன் என நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் ஆரம்பித்து உன்னில்தான் முடிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !