மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
925 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
925 days ago
சின்னத்திரை நடிகரான அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் பட்டத்தை வென்று ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார். பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அசீம் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என புகார்கள் எழுந்தது. அசீமும் 2024-ல் அரசியல் பாதையில் பயணிப்பேன் என பிக்பாஸ் வீட்டில் பேசியிருந்தார்.
இந்நிலையில், அசீம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டிருந்தார். எனவே, அசீம் இனி அரசியலில் பயணிக்க போகிறாரா? என பலரும் கேட்க ஆரம்பித்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டாவில், 'அரசியலும் சினிமாவும் எனது இரு கண்கள். ஆனால், இப்போதைக்கு சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
925 days ago
925 days ago