மாடலிங்கில் அசத்தும் சூப்பர்சிங்கர் நித்யஸ்ரீ!
ADDED : 1053 days ago
சூப்பர் சிங்கர் பிரபலமான நித்யஸ்ரீ சிறுவயதிலேயே உலக அளவில் புகழ் பெற்று பல கச்சேரிகளில் பாடினார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 'அவன் இவன்' படத்தின் மூலம் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளில் சில பாடல்களை பாடியுள்ள அவர், அதர்வாவின் ஈட்டி படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட நித்யஸ்ரீ மாடலிங்கில் கவனம் செலுத்தி வருவதுடன் அடிக்கடி இண்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது. விரைவில் முழுநேர நடிகையாக எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.