உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் படங்களில் நடிக்க விருப்பம்: ஸ்ரேயா

தமிழ் படங்களில் நடிக்க விருப்பம்: ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா நடித்த ‛கப்சா' திரைப்படம் பான் இந்தியா படமாக மார்ச் 17ல் வெளியாக உள்ளது. படம் குறித்து ஸ்ரேயா கூறுகையில், ‛‛தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களைக் கொடுத்துள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன்.

திருமணமாகி குழந்தைப் பெற்றது, பிறகு கொரோனா என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக, கொரோனா காலத்தில், மீண்டும் வேலை செய்வோமா என்ற நிலைதான் பலருக்கும் இருந்தது. அதனால், இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன்.

அதேநேரத்தில், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை, நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும்போது பார்த்து பெருமைப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !